பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் - சசிகலா பிடிவாதம்

April 21, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.21 (டி.என்.எஸ்) கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்பதற்காக பிரிந்த ஓபிஎஸ் மீண்டும் அதிமுக-வின் இணைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினர் வைத்துள்ள கோரிக்கைகளில் ஒன்றாக கட்சியின் பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், என்பதை சசிகலா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.


சசிகலா, தினகரன் குடும்பத்தாரை கட்சியை விட்டு நீக்கினால் தான் பேச்சுவார்த்தை என்ற நிபந்தனை வைத்த ஓபிஎஸ் தரப்பு, தற்போது தினகரன், சசிகலா ஆகியோரது ராஜினாமா கடிதம் வேண்டும் என்று கூறிவருகிறார்கள். காரணம் சசி, தினகரனின் விலகல் அவர்கள் போடும் நாடகமாக இருக்கலாம், என்று அவர்கள் கருதுவது தான்.

இந்த நிலையில், ஓபிஎஸ்-ன் இத்தகைய நிபந்தனை குறித்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டதாம். இதை கேட்ட அவர் ரொம்ப கோபப்பட்டதுடன், தினகரனின் தலையீடு இருக்க கூடாது என்று அவர்கள் கேட்டது போல தினகரனை ஒதுங்கியிருக்க சொல்லிவிட்டேன். இப்போது என்னை ராஜினாமா செய்ய சொன்னால் எப்படி. 

இந்த ஆட்சியை உருவாக்கிய என்னையே ராஜினாமா செய்ய சொல்லும் ஓபிஎஸ் இணைந்தால் தான் ஆட்சி நிலைக்கும் என்றால் அப்படிப்பட்ட ஆட்சியே தேவையில்லை. நீங்க தேர்தலில் நின்று வெற்றி பெற்று வாங்க, அதன் பின்னர் ராஜினாமா செய்கிறேன்.” என்று தெரிவித்தாராம்.