.

பட வாய்ப்புகளை தடுப்பதாக ரம்யா நம்பீசன் புகார்!

August 09, 2018, Chennai

Ads after article title

நடிகை பாவனா கற்பழிப்பு வழக்கில் கைதான நடிகர் திலீப்பை மீண்டும் மலையாள நடிகர்கள் சங்கத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது உறுப்பினர் பதவியை ரம்யா நம்பீசன் ராஜினாமா செய்தார்.


இதனால், மேலும் சில நடிகர் நடிகைகளும் சங்கத்திற்கும் தலைவர் மோகன்லாலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தனக்கு வரும் புதிய பட வாய்ப்புகளை சிலர் தடுப்பதாக ரம்யா நம்பீசன் குற்றம் சாட்டியுள்ளார். ரம்யா நம்பீசனை படங்களில் ஒப்பந்தம் செய்தால், அவர் படப்பிடிப்பு நடத்தவிடாமல் தொல்லை தருவார் என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பொய்யான பிரச்சாரம் செய்து அவரை நடிக்க விடாமல் செய்கிறார்களாம்.

இது குறித்து பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமயா நம்பீசன், நடிகன் மோகன்லால் மீது மறைமுகமாக குற்றம் சாட்டியும்  பேசினார்.