படைப்பின் ஆற்றல்: யோகி அஷ்வினி

December 29, 2016, Chennai

Ads after article title

“ஆற்றலை உருவாக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது, ஆனால் ஒரு ஆற்றலை இன்னொரு ஆற்றலாக மாற்ற முடியும்”, என்பது இயற்பியலின் அடிப்படை என்றுதான் நாம் அறிவோம்.


உண்மையில் இது படைப்பின் அடிப்படை விதி. 

ஆற்றல் நம்மை சுற்றி எல்லா இடங்களிலும் இருக்கிறது.....பல்வேறு பரிணாமங்களில். ரிஷிகளின் கூற்றுப்படி ஆற்றலின் மறுபெயர் பிராணம். ஒவ்வொரு ஆற்றலும் தனக்கென்று ஒரு அதிர்வைக் கொண்டு இருக்கும். ஒரு குறிப்பிட்ட அதிர்வு இடைவெளியில் இருக்கும் ஆற்றலை மட்டும் தான் நம்மால் உணர முடிகிறது. அந்த இடைவெளிக்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும் ஆற்றலை நம்மால் உணர முடிவது இல்லை. நம்மால் உணர முடிந்த ஆற்றல், பிரமத்தின் முடிவில்லா ஆற்றலின் சிறிய பகுதி. 

ஒரு தீபத்தின் மேல் நம் உள்ளங்கையை வைத்து, பின்பு மேலே உயர்த்த உயர்த்த ஒரு புள்ளியல் வெப்பத்தை உணர்வது நின்று விடுகிறது. வெப்பம் உணர முடியவில்லை, என்பதால் தீபம் அங்கே எரியவில்லை என்று அர்த்தமா?. அப்படி இல்லை. ஒரு குறிப்பிட்ட அதிர்வுக்கு மேல் உணரும் தன்மை நம் உள்ளங்கைகளுக்கு இல்லை. நம்மால் உணர முடிந்த, உணர முடியாத, அரைகுறையாக உணர முடிந்த எல்லா ஆற்றல்களும் படைப்பில் இருக்கிறது. ஆற்றலை உணர்வது நம் தனிப்பட்ட உணரும் தன்மையையும், அதன் மீதான கவனத்தின் ஆழத்தையும் பொறுத்தது. 

நாம்மால் முழுமையாக உணர முடியாத ஆற்றலை உள்வாங்க ரிஷிகள் உபயோகித்த வழிதான் யாகங்கள். யாகங்கள் தேவர்களுக்கு அளிக்கும் ஊட்டம். புரியும்படி சொல்லப் போனால் அவர்களுக்கு அளிக்கும் உணவு. யாகங்கள் தேவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தும். இதன் மூலம் பிறப்பிக்கப்படும் ஆற்றல் படைப்பை  சிறப்பாக இயக்கும். யாகங்களின் நோக்கம் அதுவே. 

யாகத்தில் தேவர்களுக்கான படையலை மந்திர ஜெபத்துடன் சேர்த்து அக்னியில் படைக்கப்படுகிறது. அக்னியில் இடும் திடப்பொருள் நுண்பொருளாக மாறும். சொல்லப்படும் மந்திரம் தெய்வீக சக்தியை வெளிப்படுத்தும். தேவர்களின் இந்த அருள் இந்த உலகத்தை இயக்க துணை செய்வதோடு, யாகத்தை செய்பவர்களுக்கும் அழகும் மென்மையும் அளிக்கும்.     

எளிமையான யாகம் செய்யும் முறை. காப்பரில் செய்யப்பட்ட ஒரு யாக குண்டத்தில், பசுச் சாணம், எள், குகுள் எடுத்துக் கொள்ளுங்கள். கற்பூரத்தின் மூலம் தீபம் ஏற்றி, நாட்டுப் பசுவின் நெய்க் கொண்டு மந்திர ஜெபத்துடன் யாகம் செய்யலாம். இதுப் பற்றி விவரம் பெற தியான் ஆசிரமத்தை அணுகலாம். இதே முறையை ஒரு மெழுகுவர்த்தி முன்பு இருந்தும் செய்து பாருங்கள்.

யாகம் செய்யும் போது, அதன் அக்னியை உணருங்கள். நீங்கள் ஒரு குளுமையையும், ஒரு விதமான கூச்சத்தையும் உணரலாம். மெழுகுவர்த்தியின் முன்னால் இந்த அனுபவத்தை பெற முடியாது. தனிப் பட்ட முறையில் நான் பல ஆய்வுகளை செய்து இருக்கிறேன். பல முறை மக்கள் யாகத்தில் கைவைத்து முயற்சி செய்து உள்ளனர். அந்த சமயம் எந்த ஒரு வெப்பமும் கைகளில் உணர்வது இல்லை. இதுப் போன்ற ஒரு ஒளிப்பதிவை www.dhyanfoundation.com என்ற இணையத்தில் காணலாம்

ஆனால் மிக முக்கியமான ஒரு செய்தி , மந்திரம் என்பது ஏற்கனவே சிக்தி பெற்ற ஒருவரிடம் இருந்து பெறப்பட வேண்டும். குரு என்பவர் அதற்காக பணமோ பொருளோ வாங்குபவர் இல்லை. வியாபரத்துடன் பிணைக்கப்பட்ட வேத அறிவியலுக்கு எந்த சக்தியும் இல்லை.  
தியான் ஆசிரமத்தால் உலகில் பல இடங்களில் இலவச யோகப் நடத்தப்படுகிறது. தகவல் பெற : 9841430369,