.

நைஜீரியா - போகோ ஹாரம் தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலில் 15 பேர் பலி

August 10, 2018, Chennai

Ads after article title

நைஜீரியா நாட்டின் மாய்துகுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் சிலர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.


மேலும், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு நைஜீரியாவின் மாய்துகுரி நகரில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.