நேரில் ஆஜராக கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் உத்தரவு

April 21, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.21 (டி.என்.எஸ்) மகாபாரதம் தொடரபான வழக்கில் நடிகர் கமல்ஹாசன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன் அரசியல், சினிமா, ஆன்மீகம், திராவிடம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். அதில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு பதிலளித்த அவர், இந்து மத இதிகாசங்களுள் ஒன்றான 'மகாபாரதம்' மேற்கோள் காட்டி பேசினார் என்று அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், வருகிற மே 5 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.