நியூசிலாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டி : ஹாட்ரிக் தோல்வியில் இந்திய அணி

May 18, 2017, Chennai

Ads after article title

புகெகோ, மே 18 (டி.என்.எஸ்) நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஹாக்கி அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.


ஏற்கனவே முதல் இரண்உ போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, நேற்று நடந்த மூன்றாவது போட்டியிலும் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, ஹாட்ரிக் தோல்வியுடன் தொடரை இழந்துள்ளது.

நேற்றைய போட்டியில் இந்திய அணி தரப்பில் தீப் கிரேஸ் எக்கா ஒரு கோலும், மோனிகா ஒரு கோலும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் எல்லா குன்சன். டீனா ரிட்ஷி, ஷிலோக் கோன் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர்.