நியூசிலாந்துக்கு எதிரான ஹாக்கி : இந்திய பெண்கள் அணிக்கு 2 வது தோல்வி

May 17, 2017, Chennai

Ads after article title

வெல்லிங்டன், மே 17 (டி.என்.எஸ்) நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.


இதன் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய வீரர்களை திணறடித்த நியூசிலாந்து, 8-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.