.

நயன்தாராவுக்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட பங்களா!

July 06, 2018, Chennai

Ads after article title

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கையில் அரை டஜன் படங்கள் இருக்கின்றன.


'இமைக்கா நொடிகள்', 'கோலமாவு கோகிலா' ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கும் நயன்தாரா, அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் நடிக்க தொடங்கிவிட்டாராம்.

இதன் பிறகு, கமலின் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பவர், அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'லட்சுமி' என்ற குறும்படத்தை இயக்கிய சார்ஜுன்  இயக்குகிறார்.

பேய் படமாக உருவாகும் இப்படத்திற்காக நயன்தாரா 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழு இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான பேய் பங்களா ஒன்றை உருவாக்கி வருகிறதாம்.