நயந்தாராவுடன் ஜோடி போடும் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர்!

April 15, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.15 (டி.என்.எஸ்) தமிழகத்தின் முன்னணி ஜவுளிக்கடைகளில் ஒன்றான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் சமீபகாலமாக தனது நிறூவன விளம்பரப் படங்களில் அவரே நடித்து வருகிறார்.


தமன்னா, ஹன்சிகா என்று இரண்டு நாயகிகளுக்கு இடையே தோன்றியவர், தற்போது ராஜு சுந்துரத்துடன் இணைந்து நடனம் ஆடும் அளவுக்கு ஒரு விளம்பர நடிகராக வளர்ந்து விட்டார்.

இந்த நிலையில், விரைவில் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ள சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன், நயந்தராவுடன் ஜோடியாக நடித்தே தான் ஹீரோவாக சினிமாவில் கால்பதிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ரூ.1 கோடி மதிப்பிலான தங்க வேல் ஒன்றை காணிக்கையாக வழங்குவதற்காக இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த சரவணன், நிருபர்களிடம் பேசும் போது, தான் சினிமாவில் ஹீரோவாக நடித்தால் முதல் படத்திலேயே நயந்தராவுடன் தான் ஜோடியாக நடிப்பேன், என்று கூறியுள்ளார்.