நட்டியின் அடுத்த மெகா ஹிட் ‘போங்கு’

May 18, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 18 (டி.என்.எஸ்) பிரபல ஒளிப்பதிவாளரான நட்ராஜ் சுப்பிரமணியன் என்கிற நட்டி, ;’சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் மெகா ஹிட் ஹீரோவாக வலம் வருகிறார்.


இதையடுத்து அவர் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், விரைவில் வெளியாக இருக்கும் ‘போங்கு’ படம் மூலம் மீண்டும் ஒரு மெகா ஹிட்டை கொடுப்பார், என்று அப்படத்தின் இயக்குநர் தாஜ்.

ஆர்.டி இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும்  இணைத்து தயாரிக்கும் படம் ‘போங்கு’. நட்டி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், பாலிவுட் கதாநாயகி ருஹி சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் அதுல் குல்கர்னி, முண்டாசுப்பட்டி ராமதாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தச்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, கபிலன், தாமரை, மதன்கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். கோபிகிருஷ்ணா எடிட்டிங்கை கவனிக்க, ராஜமோகன் கலைத் துறையை கவனிக்கிறார். சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்க, கல்யாண், பாப்பி ஆகியோர் நடனத்தை வடிவமைக்கிறார்கள். ஏ.பி.ரவி தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

பிரபல கலை இயக்குநர் சாபுசிரிலிடம் உதவியாளராக பணியாற்றிய தாஜ், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

படம் பற்றி கூறிய இயக்குநர் தாஜ், “நட்டிக்கு மிகவும் பொருத்தமான கதைக்களமாக அமைந்துள்ள ‘போங்கு’ படு வேகமான படமாக உருவாகியுள்ளது. டிரவாலிங் சம்மந்தமான படம் என்பதால், படத்தின் காட்சிகளும் ஹைவேஸ் ரோடுகளில் வேகமான செல்லும் வாகனங்கள் போலவே வேகமாக நகரும். நட்டிக்கு ஏத்த படம் என்று சொல்லலாம், அதைக் காட்டிலும் சொல்ல வேண்உம் என்றால், ‘சதுரங்க வேட்டை’ படத்தை மிஞ்சும் அளவுக்கு நட்டியின் கேரியரில் இப்படம் ஒரு மெகா ஹிட் படமாக இருக்கும்.” என்றார்.

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘போங்கு’ விரைவில் வெளியாக உள்ளது.