.

நடிப்புக்கு முழுக்கு போடும் சமந்தா! - விளக்கம் அளித்த கணவர்

July 11, 2018, Chennai

Ads after article title

தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. பிசியாக இருக்கும்போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார்.


திருமணத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான இரும்புத்திரை, ரங்கஸ்தலம், நடிகையர் திலகம் ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சமந்தா அடுத்த ஆண்டோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க போவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும், தற்போது அவர் நடித்து வரும் படங்களை இந்த ஆண்டுக்குள் முடித்துவிடும்படி அவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் சமந்தாவின் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, சமந்தா நடிபப்தை நிறுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. அவர் தொடர்ந்து நடித்துக்கொண்டு தான் இருப்பார். அவர் நடிப்பதை விடப்போவதாக வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி. சிறிது இடைவெளி விட்டு நடிப்பை தொடர போகிறார்." என்று தெரிவித்துள்ளார்.