.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை - காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

August 11, 2018, Chennai

Ads after article title

கர்நாடகவில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது.


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிப்பதால் கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 63 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்த 1.43 லட்சம் கனஅடி தண்ணீர் வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில்  தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70,000 கன அடியில் இருந்து இன்று 1,00,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, நீர்திறப்பு வினாடிக்கு 50 ஆயிரத்தில் இருந்து  60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.