.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 வது ஒருநாள் போட்டி - இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

August 09, 2018, Chennai

Ads after article title

இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 3-0 என முன்னிலைப் பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.


இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லெகலேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

மழையின் காரணமாக ஆட்டம் 39 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் காலம் இறங்கிய இலங்கை அணியினர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் அணி, 39 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து, 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா இறங்கியது. ஆனால் இலங்கை அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 21 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. இதைத்தொடர்ந்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.