துணை கலெக்டராகும் பி.வி.சிந்து!

May 17, 2017, Chennai

Ads after article title

அமராவதி, மே 17 (டி.என்.எஸ்) கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.


சிந்து, இந்தியாவின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கு பல தனியார் நிறுவனங்கள் பல்வேறு பரிசுகளை வழங்க, அவர் வாழும் ஆந்திர மாநில அரசு ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கியதோடு,  தலைநகர் அமராவதியல் 1000 சதுர அடி வீடும் வழங்கியது.

இந்த நிலையில், பி.வி.சிந்துவுக்கு துனை கலெக்டர் பதவி வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான சட்ட திருத்த மசோதா ஜி.எஸ். டி.க்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது.

இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்த பிறகு பி.வி.சிந்து துணை கலெகடராக நியமிக்கப்படுவார். 

தற்போது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் துணை மேலாளராக சிந்து பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.