தீ பிடித்து எரிந்த ஏரி : கர்நாடகாவில் பதற்றம்

May 09, 2017, Chennai

Ads after article title

பெங்களூர், மே 09 (டி.என்.எஸ்) கர்நாடக மாநிலம் ஹசன் நகருக்கு அருகே உள்ள தொட்டா பசவனஹல்லி என்ற கிராமத்தில் உள்ள ஏரியின் ஒரு பகுதியில் வட்ட வடிவத்தில் தீ பிடித்து எரிந்ததால், கிராம மக்கள் பீதியடைந்தனர்.


தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், அருகில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதாகவும் பெட்ரோல் நிரப்ப வரும் டேங்கர் லாரிகள் இங்கு கழுவப்படுவதாகவும், தெரிய வந்தது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் கழிவுகள் ஏரியின் மேற்பரப்பில் எண்ணைப் படலமாக மிதந்துள்ளது. அதனால் தான் ஏரியின் மேற்பரப்பில் தீ பிடித்துள்ளதாக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.