திருச்செந்தூரின் வள்ளி குகை வரலாறு: வள்ளி தேவியை விரட்டிய விநாயக பெருமான்

September 13, 2016, Chennai

Ads after article title

முருகருக்கு உள்ள ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக கூறப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய திருக்கோவில்.


இந்த கோவிலில் தல புராணம் அனைவரும் அறிந்ததே. கோவிலின் சிறப்பை பற்றி சொல்லி கொண்டே போகலாம். அதிலும் மிகவும் சிறப்பு வாய்ந்தது  என்று சொல்ல வேண்டுமானால் நாழிக்கிணறு, வள்ளி குகை, இலை விபூதி.

வள்ளி குகை:

தத்தாத்ரேயரின் குகை என்று அழைக்கப்படும் வள்ளி குகை, திருச்செந்தூர் முருகன் கோவிலின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது கடலை நோக்கியபடி, மணப்பாறையின் கீழ் அமைந்துள்ள காண்பதற்கு அழகிய இடம். இந்த வள்ளி குகைக்கு ஒரு தல புராணம் ஒன்று உள்ளது.

ஒரு முறை முருக பெருமானிடம் வள்ளி தேவி தீராத கோபத்தில் இருந்தார். முருக பெருமான் எவ்வளவு கெஞ்சியும் அவளது கோபம் குறைய வில்லை. இதனால் முருக பெருமான் தனது வேதனையை தனது சகோதரனான விநாயகரிடம் சொல்ல, விநாயகரோ நல்ல திட்டம் போட்டு தனது உருவத்தை யானையாக மாற்றி கொண்டு வள்ளி தேவியை துரத்தினார். வள்ளி தேவியோ யானைக்கு பயந்து போய் குகையில் மறைந்து கொண்டார். அந்த குகை தான் வள்ளி குகை. நாளடைவில் அந்த குகையில் வள்ளி தேவியாரின் சிலையானது பிரதிஷ் டிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.  இந்த குகைக்கு ஒருவர் மட்டுமே செல்லும் அளவுக்கு மிகவும் சிறியது. இந்த வள்ளி குகைக்கு சென்று வணங்கினால் புத்திர பாக்கியம், திருமண பாக்கியம் என அனைத்தும் கிட்டும்.

நாழிக்கிணறு:
சூரபதுமன் என்ற அசுரனை அழிப்பதற்காக முருகப்பெருமான் தன் படைகளுடன் திருச்செந்தூரில் முகாமிட்டு இருந்தார்.அப்பொழுது படைவீரர்களின் தாகத்தினை தீர்ப்பதற்காக தன் வேலினால் இந்த கிணற்றை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன்.இந்த தீர்த்தம் கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இதன் நீர் இனிப்பு சுவை கொண்டுள்ளது. மேலும் இது அள்ள அள்ள குறையாத நீர்நிலையாகவும் திகழ்கிறது.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடி விட்டு நாழிக்கிணறிலில் குளித்து விட்டு செல்லுகின்றனர். இந்த நாழிக்கிணறிலில் குளித்தால் தீராத வியாதிகள் எல்லாம் குணமாகும் என்பது ஐதீகம்.

இலை விபூதி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது. தீராத குன்ம நோயால் அவதிப்பட்ட விஸ்வாமித்திரர், முருகப்பெருமானை மனமுருகி வணங்கி ,இலை விபூதிப் பிரசாதத்தால் குணம் அடைந்தார் என்கின்றன புராணங்கள். முருக பெருமானின் பன்னிரு கரங்களே இலையின் பன்னிரு நறும்புகளாக உள்ளது என்றும் கூறுவர்.

 

வளர்பிறை சஷ்டி திதி நாளில் முருகப்பெருமானைத் தரிசித்து இலை விபூதிப் பிரசாதத்தைப் பெற்று வந்து, வீட்டுப் பூஜையறையில் வைத்து, 48 நாட்கள் விரதம் இருந்து, விபூதியை அனு தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ள குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெரும் . சகல செல்வங்களும் சேரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.