.

தாஜ்மஹாலை இடித்தது தள்ளுங்கள்- கோபப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி

July 12, 2018, Chennai

Ads after article title

தாஜ்மஹாலை பராமரிக்க முடியாவிட்டால், அதனை இடித்து தள்ளுங்கள், என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். 

தாஜ்மஹாலை பாதுகாக்கக் கோாி சுற்றுச்சூழல் ஆா்வலா் எம்.


சி.மேத்தா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். இதனைத் தொடா்ந்து தாஜ்மஹாலை பாதுகாப்பது குறித்து உத்தரபிரதேச அரசு தொலைநோக்கு திட்ட அறிக்கை ஒன்றை ஜூலை 11ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இந்த வழக்கு புதன் கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால், உத்தரபிரதேச அரசு திட்ட அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதனால் கோபப்பட்ட நீதிபதிகள், தாஜ்மஹாலை பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகள் எந்த அக்கறையும் காட்டுவது கிடையாது. தாஜ்மஹாலை காக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அதை மூடிவிடுவோம் அல்லது நீங்களே அதை இடித்துத் தள்ளுங்கள் என்று கடுமையாக சாடியுள்ளனா். 

மேலும் பாரிசில் உள்ள ஈபில் கோபுரத்தை விட தாஜ்மஹாலை அழகாக இருப்பதாகவும், அதை வைத்து நமது அந்நிய செலாவணி பிரச்சினைகளை தீா்த்திருக்க முடியும் என்றும் நீதிபதிகள் தொிவித்தனா்.