தமிழன படுகொலை வாரம் : மே 12 முதல் 18 வரை அனுசரிப்பு!

May 09, 2017, Chennai

Ads after article title

கொழும்பு, மே 09 (டி.என்.எஸ்) வரும் மே 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை ‘தமிழன படுகொலை வாரம்’ அனுசரிக்கப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பை நேற்று யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இலங்கை வடமாகாண சபை உறுப்பினர் எம்.


கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டார்.

மேலும் பேசிய அவர், ”முள்ளிவாய்க்காலில் மே 18 ஆம் தேதி இடம்பெற்ற தமிழினப் படுகொலையை கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழினப் படுகொலை வாரமாக அனுசரித்து வருகிறோம். அந்த வகையில் இந்த வருடமும் அனுசரிக்க உள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் அதிகமானவர்கள் கொலை செய்யப்படுப் புதைக்கப்பட்ட செம்மணிப் பகுதியில் 12 ஆம் தேதி நினைவு ஏந்தல் இடம்பெற உள்ளது. கிழக்கு மாகாணத்தில் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படும். நவாலி சென் பீட்டர்ஸ் ஆலயத்தில் இடம்பெற்ற படுகொலை நினைவு நாள் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படும். இதேவேளை, நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற குமுதினி படகுப் படுகொலை 15 ஆம் தேதியன்று நினைவு கூறப்படுவதுடன், 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் அனுசரிக்கப்படும். இறுதியாக மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் நினைவு ஏந்தல் அனுசரிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.