.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை - வானிலை ஆய்வு மையம்

July 12, 2018, Chennai

Ads after article title

கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்கு குறிப்பில், "கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், அதனை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை அல்லது மிக பலத்த மழை பெய்யும்.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தின்  ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.