தனுஷின் ஹாலிவுட் பட புகைப்படங்கள் லீக்கானது!

May 16, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 16 (டி.என்.எஸ்) 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர் ஹூ காட் டிராப்ட் இன் அன் ஐகியா கபோர்ட்' என்ற பிரபல பிரஞ்சு நாவலை தழுவி உருவாகவுள்ள ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கப்பட்டுள்ளது.


 

இந்நிலையில், சமூக வலைதளத்தில் வெளியான தனுஷின் புகைப்படம் வைரலாகி வருகிறது. முற்றிலும் வித்யாசமான தோற்றத்துடன் தனுஷ் நடிக்கவிருக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதில் தனுஷுடன் இணைந்து 'தி ஆர்டிஸ்ட்' திரைப்பட நாயகி பெர்னிஸ் பெஜோ, உமா துர்மான் மற்றும் அலெக்ஸஸாட்ரா தாத்ரியோ உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, கனடா, உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. முன்னதாக இப்படத்தை பிரபல பிரெஞ்சு இயக்குநர் மார்ஜ்னே சத்ரபி இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கனடா இயக்குநர் கேன் ஸ்காட் இயக்கவிருக்கிறார்.