டோனிக்கு எதிரான வழக்கு : உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

April 21, 2017, Chennai

Ads after article title

டெல்லி, ஏப்.21 (டி.என்.எஸ்) இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக, கூறி டோனி மீது தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


ஆங்கில மாத இதழின் அட்டை பக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை விஷ்ணு போல் சித்தரித்து, அந்த புகைப்படத்தில் டோனியின் கைகளில் பல விளம்பர பொருட்கள் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த புகைப்படத்திற்கு எதிராக டோனி மற்றும் அந்த படத்தை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் ஆகியோர் மீது கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக இந்த புகைப்படம் இருப்பதாகவும், என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.

கர்நாடகாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், ஆந்திராவில் தொடரப்பட்ட வழக்கின் அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டோனி மீதான வழக்கை நீதிபதிகள் தள்ளூபடி செய்தனர்.