டெல்லி போலீசாரிடம் 3 நாள் அவகாசம் கேட்ட தினகரன்

April 21, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.21 (டி.என்.எஸ்) இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு  பதிவு செய்துள்ளனர்.


கைதான இடைத்தரகர் சுகேஷிடம் நடத்திய விசாரணையின் மூலம் தினகரன் ரூ.50 கோடி கொடுக்க சம்மதம் தெரிவித்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து டெல்லி போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், இன்ஸ்பெக்டர் நரேந்திர ஷாகல் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்னை பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்துக்கு வந்தனர். டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்திய பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் டி.டி.வி.தினகரனிடம் சம்மன் வழங்கப்பட்டது. சனிக்கிழமை ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.

சம்மனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசில் நாளை ஆஜர் ஆவார் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே அவர் போலீசில் ஆஜராக 3 நாள் அவகாசம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை டெல்லி போலீசார் உறுதிப்படுத்தவில்லை.