.

'டிக் டிக் டிக்' விமர்சனம்

June 23, 2018, Chennai

Ads after article title

இந்திய சினிமாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்ற விசிட்டிங் கார்ட்டோடு வெளியாகியிருக்கும் 'டிக் டிக் டிக்' ரசிகர்களின் இதயத்தை படபடக்க வைத்ததா என்பதை பார்ப்போம்.


பூமியை நோக்கி வரும் விண்கல் ஒன்று, வங்காள விரிகுடா கடலில் விழும் என்றும், அப்படி விழும் போது 1000 அடிக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டு அதன் மூலம் தமிழகம் மட்டும் இன்றி, அண்டை மாநிலங்களும் பாதிக்கபப்டும் என்பதை இந்திய ராணுவத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்டுபிடிக்கிறது.

மேலும், இந்த விபத்தினால் தமிழகத்தில் 4 கோடி மக்கள் உயிரிழக்க கூடும் என்று கணக்கிடும் ராணுவ துறை, விண்ணில் வைத்தே அந்த கல்லை வெட்டி வைத்து தகர்த்தால் மட்டுமே இந்த பேராபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்பதால், விண்கல்லை தகர்ப்பதற்கான முயற்சியில் இறங்குகிறது. விண்கல்லை தகர்க்க வேண்டும்.

ஆனால் சுமார் 200 கிலோ நியூக்ளியர் வெடிமருந்து தேவைப்படும் என்றும், ஐ.நா விதிமுறைப்படி தற்போது அந்த அளவு வெடிமருந்தை எந்த நாடும் கையிருப்பு வைத்திருக்கவில்லை என்றும் சயின்டிஸ் ஒருவர் சொல்லிறார். அதே சமயம், சட்ட விரோதமாக ஒரு நாடு 200 கிலோ நியூக்ளியர் வெடிமருந்து கொண்ட ஆயுதம் ஒன்றை வைத்திருப்பதாகவும், அந்த ஆயுதம் அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருப்பதை கண்டுபிடிக்கும் இந்திய ராணுவம், அதை அவர்களிடம் இருந்து திருடி அதன் மூலம் தமிழகத்தை நோக்கி வரும் விண்கல்லை தகர்க்க திட்டம் போடுகிறார்கள். அந்த ஆயுதத்தை மிக பாதுகாப்பான விண்வெளி மையத்தில் இருந்து எடுக்க, கைதேர்ந்த திருடன் ஒருவரை தேடும் ராணுவம், ஜெயம் ரவியை தேர்வு செய்கிறது.

செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் ஜெயம் ரவி, ராணுவத்திற்கு உதவி செய்தால் சிறையில் இருந்து வெளியே வந்து விடலாம் என்பதால், ராணுவத்திற்கு உதவி செய்ய சம்மதிக்கிறார். அதே சமயம், கம்யூட்டர் டெக்நாலாஜி தெரிந்த தனது நண்பர்கள் இருவரை தன்னுடன் சேர்த்துக் கொண்டு விண்வெளிக்கு போக தயாராகும் ஜெயம் ரவியின், மகனை கடத்தி வைத்து மர்ம ஆசாமி ஒருவர், விண்வெளியில் திருதும் ஆயுதத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும், என்று மிரட்டுகிறார். தனது மகனுக்காக மர்ம ஆசாமியின் மிரட்டலுக்கு அடிபணியும் ஜெயம் ரவி, தனது குழுவினருடன் விண்வெளிக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அதே மரம் ஆசாமி, ராக்கெட்டில் இருக்கும் பெட்ரோல் கனெக்ஷனை கட் செய்யுமாறு ஜெயம் ரவிக்கும் உத்தரவிட, தனது மகனுக்காக அதையும் ஜெயம் ரவி செய்துவிட, ராக்கெட் நிலை தடுமாறி, நிலாவில் தரையிறங்கி விட, அதில் இருந்து ஜெயம் ரவியும் அவரது குழுவினரும் எப்படி மீண்டு ஆயுதத்தை கைப்பற்றி பேரழிவை தடுக்கிறார்கள், என்பது தான் ''டிக் டிக் டிக்' படத்தின் மீதிக்கதை.

ஹாலிவுட் படங்கள் அளவுக்கு இல்லை என்றாலும், உள்ளுவர் படங்களில் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்ற அளவில் திரைக்கதையையும், காட்சிகளையும் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கையாண்டுள்ளார். ஹைடெக் திருடனான ஜெயம் ரவி, ஹீரோவாக இல்லாமல் கதாபாத்திரமாக இப்படத்தில் வளம் வருவதோடு, ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார். குறிப்பாக செண்டிமெண்ட் காட்சிகளில் கூட இயல்பாக நடித்திருக்கும் அவரது நடிப்பு நம்மை கவர்கிறது. ராணுவ அதிகாரியாக வரும் நிவேதா பெத்துராஜ், ராணுவ உடையில் மிடுக்காக இருப்பதோடு, மற்ற உடைகளில் எடுப்பாகவும் வளம் வருகிறார்.

கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நடுவர் தீர்ப்பையா தங்களது கம்ப்யுயூட்டர் டேகினாலஜி மூலம் மாற்றும் அர்ஜுனன், ரமேஷ் திலக் ஆகியோரது காமெடிகள் கட்சியை ஒட்டியே வருவதால் ரசிக்க முடிகிறது. பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் டி.இமான், இரண்டையும் நிறைவாக கொடுத்திருக்கிறார். எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவும், கலை இயக்குனரும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்கள்.

குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சி மையம், விண்வெளிக்கு செல்லும் ராக்கெட் போன்ற செட் பிரமிக்க வைக்கிறது. விண்வெளியை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனர் சக்தி சவுந்தரராஜன், கமர்ஷியலாக படத்தை நகர்த்தி சென்றாலும், ரெகுலராக பார்மட்டை தவிர்த்துவிட்டு, ஆரம்பத்திலேயே கதைக்குள் நம்மை அழைத்து செல்பவர், ஜெயம் ரவியை ஹியரோவாக சித்தரிக்காமல், படத்தின் ஒரு கதாபாத்திரமாக சித்திரித்திருப்பது படத்திற்கு பிளாசாக அமைந்திருக்கிறது.

விண்வெளி என்ற பெரிய விஷயமாக இருந்தாலும், அனைவரும் புரிந்துக்கொள்ளும் படி ஏழ்மையான விதத்தில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனர் சக்தி சவுந்தரராஜன், நம்ம ஊர் சினிமாவுக்கான அத்தனை அம்சங்கள் கொண்ட படமாக முழு படத்தையும் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், கிராவிட்டி போன்ற படமாக இந்த 'டிக் டிக் டிக்' இல்லை என்றாலும், புதிய முயற்சியை அனைவரும் புரிந்துகொள்ளும் ஒரு பொழுதுபோக்கு சினிமாவாக இருக்கிறது.

-ஜெ.சுகுமார்