செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் என்ன தண்டனை தெரியுமா?

May 09, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 09 (டி.என்.எஸ்) விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்கும் நடவடிக்கையாக, மோட்டார் வாகனம், சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக கண்காணிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக ஓட்டுபவர்கள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்யப்பட வேண்டும், என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வேண்டும், என்று போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டு உள்ளார்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், அவர்களது ஓட்டுநர் உரிமம் 6 மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதும், தொடர்ந்து மூன்று முறை மது அருந்தி வாகனம் ஓட்டி சிக்கினால், அவர்களது ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவது ஏற்கனவே அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.