.

செப்டம்பர் 28 ஆம் தேதி ‘செக்க சிவந்த வானம்’ ரிலீஸ்!

August 11, 2018, Chennai

Ads after article title

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நட்சத்திப் பட்டாளம் நடிக்கும் படம் ‘செக்க சிவந்த வானம்’.


மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இப்படத்தை வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியிடப் போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.