.

செப்டம்பர் மாதம் ரிலிஸாகும் ‘100 சதவீதம் காதல்’

August 10, 2018, Chennai

Ads after article title

தமன்னா, நாக சைதன்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற தெலுங்குப் படமான ‘100 % காதல்’ படம், தமிழில் ‘100 சதவீதம் காதல்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.


இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமைய்யா, தலைவாசல் விஜய், ஆர்.வி.உதயகுமார், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிப்பதோடு, இப்படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். சந்திரமவுலி எம்.எம் இயக்கும் இப்படத்தின் பாடல் காட்சிகள் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட முடிவு செய்திருக்கும் படக்குழு படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளது.