.

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!

July 11, 2018, Chennai

Ads after article title

'காலா' படத்திற்கு தீவிர அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், ரஜினியோ படங்களில் நடிப்பதில் தான் தீவிரம் காட்டி வருகிறார்.


அதன்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடித்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். அவருடன் படப்பிடிப்பு குழுவினரும் சென்று இருந்தனர்.

அங்கு சினிமா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அவர் நேற்று இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

மேலும், கார்த்திக் சுப்புராஜ் படம் முடிந்த பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.