.

சென்னையில் நடைபெறும் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் - அமித்ஷா பங்கேற்பு

July 06, 2018, Chennai

Ads after article title

தமிழகத்தில் வர இருக்கும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பா.ஜ.க நிர்வாகிகளிடையே ஆலோசனை கூட்டம் சென்னையில் வரும் ஜூலை 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.


இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்துக்கொள்கிறார்.

5 வாக்குச்சாவடியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதாற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியான விவாதங்களும், கலந்துரையாடல்களும் மட்டும் தான் இருக்குமாம்.

இந்த கூட்டத்திற்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுடன் 2 மணி நேரம் கலந்துரையாடும் அமித்ஷா, அதன் பிறகு சகோதர அமைப்புகளை சார்ந்த சில தலைவர்களையும் சந்திக்க இருக்கிறாராம்.

இந்த தகவல்களை தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.