.

சென்னையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 5 பேர் கைது!

July 05, 2018, Chennai

Ads after article title

சட்டவிரோதமாக சாலைகளில் நடத்தப்படும் பைக் ரேஸை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


அதன்படி, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார், சாலைகளில் பைக் ரேஸ் என்ற பெயரில் வேகமாக மோட்டார் கைக்கிளைகளை ஒட்டி மக்களை அச்சுறுத்துபவர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி நசரத்பேட்டை பகுதியில் ஆட்டோ ரேஸ் நடப்பதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது.  இதையடுத்து தனிப்படை போலீஸார் நெமிலிச்சேரி-வண்டலூர் 400 அடி வெளிவட்ட சாலை, நசரத்பேட்டை மேம்பாலம் அருகில் கண்காணித்தனர்.

அப்போது சாலையில் சீறிப்பாய்ந்து ஆட்டோக்கள் சென்றன, அதற்கு வழிகாட்டியபடி இரு சக்கர வாகனங்கள் செல்ல வாகன ஓட்டிகள் பயத்துடன் செல்வதைப் பார்க்க முடிந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை நிறுத்தச் சொன்னபோது எந்த ஆட்டோவும் நிற்கவில்லை. உடனே போலீஸார் இருசக்கர வாகனங்கள், கார்களில் ரேஸ் சென்ற ஆட்டோக்களைத் துரத்தினர்.

போலீஸார் துரத்தலில் ஆட்டோ ரேஸ் சென்ற 5 பேர் பிடிபட்டனர். 3 ஆட்டோ ஓட்டுநர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 5 நபர்களையும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் போலீஸார் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸார் விசாரணையில் 10 கிலோ மீட்டருக்கு ரூ.5 ஆயிரம் பணம் பந்தயம் வைத்து 6 ஆட்டோக்கள் ரேஸ் சென்றது தெரியவந்தது.