.

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே புதிய சுரங்க நடைபாதை திறப்பு

July 12, 2018, Chennai

Ads after article title

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல ஏதுவாக கட்டப்பட்டு வந்த சுரங்க நடைபாதை பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய சுரங்க நடைபாதை மூலம், சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பூவிருந்தவல்லி பிரதான சாலையை கடக்க பொதுமக்கள் பயன்படுத்தலாம். தவிர, இந்த சுரங்க நடைபாதையின் மூலம் மூர் மார்கெட் காம்பிளக்ஸின் ஒரு பக்கம் மற்றும் பூங்கா புறநகர் ரயில் நிலையத்திற்கும் செல்லலாம்.