செண்பகவல்லியம்மன் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது

April 05, 2017, Chennai

Ads after article title

கோவில்பட்டி, ஏப்.05 (டி.என்.எஸ்) செண்பகவல்லியம்மன் - பூவவநாதசுவாமி கோவிலின் பங்குனி பெருந்திருவிழா இன்று தொடங்கியது.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் - பூவநாதசுவாமி திருக்கோவில், தென் மாவட்டங்களில் உள்ள புகழ் பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் 11 நாள் நடைபெறும் பங்குனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்.

இந்த ஆண்டுக்கான  பங்குனி பெருந்திருவிழா இன்று (ஏப்.05)  காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி , அம்பாள் மற்றும் பாரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் கொடி மரத்தில் பக்தர்களின் சிவ,சிவ கோஷங்களுடன் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.