.

சூர்யாவுக்கு வந்த அரசியல் ஆசை!

August 09, 2018, Chennai

Ads after article title

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பலர் தங்களது படங்களில் அரசியல் சம்மந்தமான வசங்கள் பேசி வருவதோடு, அரசியலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.


ஏன், நேற்று வந்த விஷால் கூட இடைத் தேர்தலில் போட்டி, சினிமா சங்க தேர்தலில் போட்டி என்று அரசியலில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார்.

ஆனால், இவர்களில் இருந்து தனித்து தெரியும் நடிகர் சூர்யா, வித்தியாசமான படங்களில் நடிப்பது, பலவிதமான விளம்பர படங்களில் நடிப்பது என்று கல்லா கட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவரின் உள்மனதில் இருந்த அரசியல் ஆசை லேசாக எட்டி பார்க்க செய்கிறது.

ஆம், சூர்யாவுக்கும் அரசியல் ஆசை மட்டும் அல்ல ஆர்வமும் இருக்கிறது என்பதை உணர்த்த வருகிறது 'என்.ஜி.கே ' படம். 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படம் அரசியல் த்ரில்லர் படம் என்ற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், இப்படத்தில் சூர்யா எம்.எல்.ஏ வேடத்தில் நடிக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, அகரம் பவுண்டேஷன் மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாணவர்களை சந்தித்து வரும் சூர்யா, என்.ஜி.கே படம் ரிலீஸுக்கு  பிறகு தனது அரசியல் ஆசையை முழுவதுமாக வெளிப்படுத்தப் போவதாகவும் கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.