.

சீனாவில் வெளியாகும் ‘மெர்சல்’

August 11, 2018, Chennai

Ads after article title

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி வந்தது.


இந்த நிலையில் மேலும் ஒரு சாதனையாக சீனா நாட்டில் ‘மெர்சல்’ வெளியாகி, அந்நாட்டில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

சீனாவில் ‘மெர்சல்’ படத்தை வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுள்ள எச்.ஜி.சி நிறுவனம், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.