சீனாவில் வெளியாகும் ‘பாகுபலி’!

June 17, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூன் 17 (டி.என்.எஸ்) ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ மற்றும் ’பாகுபலி-2’ திரைப்படங்கள் இந்தியாவில் மாபெரும் வெற்றி பெற்றதோடு, ரூ.


1000 கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது.

இந்த நிலையில், உலக நாடுகள் பலவற்றில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ‘பாகுபலி-2’ படத்தை சீனாவில் சுமார் 4 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழுவின் திட்டமிட்டுள்ளனர்.

அமீர்கான் நடிப்பில் உருவான ‘தங்கல்’ படம் சீனாவில் ரூ.2 ஆயிரம் கோடியை வசூல் செய்திருப்பதால், அந்நாட்டில் இந்திய திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, ‘பாகுபலி’ படத்தையும் மிகப்பெரிய அளவில் சீனாவில் ரிலீஸ் செய்யப்படுகிறது.