.

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' செப்டம்பர் 13 ஆம் தேதி ரிலீஸ்

July 12, 2018, Chennai

Ads after article title

'வருத்தப்படாத வாலிபர் சங்கர்', 'ரஜினி முருகன்' என தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், சூரி, பொன்ராம் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'சீமராஜா'.


இதில் சமந்தா நாயகியாக நடித்திருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், படத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி கோரி கடிதம் வழங்கி இருந்தது.

இந்த நிலையில், 'சீமராஜா' படத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13 ஆம் தேதி 'சீமராஜா' வெளியாகும் என்று 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.