சிவகார்த்திகயனுடன் இணைந்த சிம்ரன்!

June 17, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூன் 17 (டி.என்.எஸ்) ‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகயன் நடிக்கும் புது படத்தை பொன்ராம் இயக்குகிறார்.


‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களை தொடர்ந்து சிவகார்த்திகயன் - பொன்ராம் இணையும் மூன்றாவது படமான இப்படத்தில் நாயகியாக சமந்தா நடிக்கிறார்.

மேலும், சிம்ரன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கும் இப்படத்தில் நெப்போலியன், சூரி உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.