.

சிரியா - பயங்கரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் பலி

August 11, 2018, Chennai

Ads after article title

உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் பயங்கரவாதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் பலியாகியுள்ளனர்.


சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படையும் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப் படைகள் சமீபகாலமாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. 

இட்லிப் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராக்கெட் வெடிகுண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாளான நேற்றும் சற்று கிழக்கை நோக்கி முன்னேறி சென்று வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 

அலெப்போவிற்கு அருகில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த  தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 30 பேர் பலியானதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.