.

சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் ஒய்வு

August 07, 2018, Chennai

Ads after article title

கடந்த மாதம் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ஜெர்மனி அணியில் மரியோ கோமஸ் இடம்பிடித்திருந்தார்.


உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜெர்மனி கருதப்பட்டது. ஆனால் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணி மீது கடும் விமர்சனம் எழும்பியது.

அந்த அணியின் முன்னணி வீரரான மெசுட் ஒசில் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் 33 வயதாக மரியோ கோமஸும் ஓய்வு பெற்றுள்ளார்.

2007-ல் இருந்து ஜெர்மனி அணிக்காக விளையாடி வந்த கோமஸ் 78 போட்டிகளில் விளையாடி 31 கோல் அடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின், இறுதி போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி வெற்றி பெறுவதற்கு மரியோ கோமஸ் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.