.

சர்ச்சையில் சிக்கிய கோலி மனைவி!

August 09, 2018, Chennai

Ads after article title

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.


இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதாவது, இந்திய கிரிக்கெட் அணிக்கு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் விருந்து அளித்தது. அப்போது இந்திய வீரர்கள் குருப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதில் நடிகை அனுஷ்கா சர்மாவும் இடம்பெற்றிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், இந்திய கிரிக்கெட் அணியின் குரூப் போட்டூவில் அனுஷ்கா சர்மாவுக்கு என்ன வேலை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இது தொடர்பாக கோலி  மற்றும் அனுஷ்கா சர்மாவை விமர்சித்து டுவிட்டரில் பலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.