சர்க்கரை நோயை கட்டுப்படுத்த ஒரு எளிய வழி!

August 12, 2016, Chennai

Ads after article title

சென்னை, ஆக.12 (டி.என்.எஸ்) 6 வயது சிறுவர்களில் தொடங்கி, 25 வயது இளைஞர்கள் என தொடர்ந்து, 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வரை, பெரும்பாலோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.


உணவு பழக்கத்தின் மாற்றத்தாலும், உடல் உழைப்பு குறைவானதாலும் தற்போதைய காலகட்டத்தில் நம் நாட்டில் சர்க்கரை நோய் என்பது சகஜமாகிவிட்டது.

இப்படி அனைவரையும் தாக்கும் இந்த சர்க்கரை நோயால், பாதிக்கப்படுபவர்கள் தினமும் உட்கொள்ளும் மருந்துகளாலும், எதிர்காலத்தில் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அப்படி மருந்து மாத்திரைகள் மூலமாக அல்லாமல், இயற்கை வைத்தியம் மூலம் சர்க்கரை நோயகை கட்டுப்படுத்த பல முறைகள் இருந்தாலும், ரொம்ப எளிமையான வழிமுறையாக நீர் வைத்தியம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நமது முன்னோர்கள் சொன்ன வைத்தியம் தான் இது என்றாலும், தற்போது இதை நாம் கடைபிடிப்பதில்லை. ஆனால், ஜப்பான் நாட்டில் இப்போதும் இந்த நீர் வைத்தியம் கடைபிடிக்கப்படுறது. அதைப் பற்றிய விவரம் இதோ:

தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்' என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

* தண்ணீரைக் குடித்த பிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

* காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.

* தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.

இம்முறைப்படி தினமும் நீரைப் பருகுவதால், மருந்து மாத்திரைகள் இல்லாமல், பல நோய்கள் குணமாவதாக ஆராய்ச்சி பூர்வமாக நிறுபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று தான் சர்க்கரை நோய். தொடர்ந்து 7 நாட்கள் இந்த முறையை பின்பற்றினால் சர்க்கரை நோய் குணமாவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், மலச்சிக்கல், வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல், இரத்த அழுத்தம், காச நோய் ஆகியவை குணமாவதுடன், இந்த முறையை தொடர்ந்து ஆறு மாதங்கள் பின்பற்றினால் புற்று நோய்கூட குணாமாகுமாம்.