சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் உள்ளிட்ட மருந்துகள் இலவசம்

November 14, 2016, Chennai

Ads after article title

புவனேஸ்வர், நவ.14 (டி.என்.எஸ்) சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் உள்ளிட்ட மருந்து, மாத்திரைகளை இலவமாக விநியோகிக்க ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.


இது குறித்து தேசிய புற்றுநோய், நீரிழிவு, இதய நோய், மூளை அடைப்பு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி பி.கே.பி.பட்நாயக் நேற்று கூறியதாவது:

அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல் அண்மையில் திருத்தப்பட்டது. இன்சுலின் உள்ளிட்ட பொதுவாக சர்க்கரை நோயைத் தடுக்கும் மருந்து, மாத்திரைகளும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி நடப்பாண்டில் மருந்துகள் கொள்முதல் செய்ய பட்ஜெட் நிதி ரூ.200 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மருந்துகளை வாங்குவதற்கு பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. 

சர்க்கரை நோயாளிகள் தங்களுக்குத் தேவைப்படும் இன்சுலின் உள்ளிட்ட மருந்து, மாத்திரைகளை அரசு சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்ளலாம். நீரிழிவு நோய் சிகிச்சைக்கான நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.