.

சர்கார் படம் விவகாரம் - சிம்பு கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த அன்புமணி

July 12, 2018, Chennai

Ads after article title

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கி வரும் 'சர்கார்' படத்தின் போஸ்டரில் இடம்பெற்ற வைகை சிகரெட் புகைக்கும் புகைப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.


இதையடுத்து பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கிடையே, சர்கார் படத்திற்கு ஆதரவாக பேட்டி ஒன்றில் பேசிய சிம்பு, சினிமாவில் நடிகர்கள் சிகரெட் புகைப்பதால் யாரும் கேட்டு போக மாட்டார்கள், என்று கூறியதோடு இது தொடர்பாக தான் அன்புமணியிடம் விவாதம் நடத்தவும் தயார், என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இது குறித்து அன்புமணியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "சிம்புவின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. இது தொடர்பாக நடிகர் சங்கம் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதம் செய்ய நான் தயார்", என்று தெரிவித்தார்.