சன் டிவி-க்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

April 21, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.21 (டி.என்.எஸ்) சன் தொலைக்காட்சிக்கு எதிராக சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


தங்களது நிறுவனம் உரிமம் பெற்றுள்ள திரைப்பட பாடல்களையும், நிகழ்ச்சியின் பின்னணி இசையில் பாடல்கள் மற்றும் அதன் இசையை சன் டிவி, தங்களிடம் அனுமதி பெறாமல் ஒளிபரப்புவதை தடுக்க கோரி, சோனி மியூசிக் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பில், இனி சன் தொலைக்காட்சி சோனி நிறுவனத்திடம் அனுமதி வாங்கிய பிறகே, அவர்கள் இசை உரிமம் பெற்றுள்ள திரைப்பட பாடல்களை ஒளிபரப்ப வேண்டும், என்று நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.