.

கோடியில் சம்பளம் வாங்கும் கண்சிமிட்டல் நடிகை!

July 11, 2018, Chennai

Ads after article title

கடந்த வருடம் யூடியூப் மூலம் பிரபலமானவர்களில் மிக முக்கியமானவர் பிரியா வாரியார். ‘ஒரு அடார் லவ்’  என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக உள்ள அவர், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில் கண்சிமிட்டும் ஒரு காட்சி மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.


தற்போது, இந்திய சினிமா வரை பிரபலமாகியுள்ள பிரியா வாரியாருக்கு தமிழ், தெலுங்கு என பல திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும், ‘ஒரு அடார் லவ்’ படத்தின் ரிலீசுக்கு பிறகே அடுத்த படம் குறித்த முடிவு எடுப்பேன், என்பதில் உறுதியாக இருப்பவர் தற்போது விளம்பர படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அதன்படி, முன்னணி சாக்லேட் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்தவர், தற்போது மற்றொரு முன்னணி நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். இதில் பிரியா வாரியாருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களே லட்சத்தில் சம்பளம் வாங்கி கொண்டிருக்க, முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே சம்பளத்தில் கோடியை தொட்ட பிரியா வாரியரை பார்த்து ஒட்டு மொத்த மலையாள சினிமாவே கலக்கம் அடைந்திருக்கிறதாம்.