கொலம்பியா : வணிக வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலி

June 19, 2017, Chennai

Ads after article title

பக்கோட்டா, ஜூன் 19 (டி.என்.எஸ்) கொலம்பியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.


கொலம்பியா நாட்டின் தலைநகர் பக்கோட்டாவின், ஜோனா ரோசா என்ற பகுதியில் ஒரு வணிக வளாகம் உள்ளது. அந்த வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் ‘ஆன்டினோ ஷாப்பிங் சென்டர்’ என்ற கடையில் தந்தையர் தினத்துக்காக பரிசுப்பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது.

அப்போது அங்குள்ள மகளிர் கழிவறையில் பலத்த சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்திருந்தவர்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர்.

 இந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.