.

கொடூரமாக கத்திரி போட்ட சென்சார் - கந்தலான 'விஸ்வரூபம் 2'

August 09, 2018, Chennai

Ads after article title

கமல் இயக்கி நடித்திருக்கும் 'விஸ்வரூபம் 2' நாளை வெளியாக உள்ள நிலையில், அப்படம் குறித்த எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்ட வில்லை.


முதல் பாகத்தின் போது படத்திற்கு எதிராக ஏற்பட்ட பிரச்சினைகள் மூலம் 'விஸ்வரூபம்' மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இதனால், தமிழகம் மட்டும் இன்றி, இந்தியா முழுவதும் அப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால், விஸ்வரூபம் 2 படத்தை பொறுத்தவரையில் படம் நாளை வெளியாகிறதா இல்லையா என்பது கூட உறுதியாக தெரியாத நிலை தான் இருக்கிறது. காரணம், கமல் பிக் பாஸ்  மற்றும் அரசியலில் தீவிரம் கட்டி வருவதால், விஸ்வரூபம் 2 படத்திற்க்கான விளம்பரத்தில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லையாம்.

இந்த நிலையில், விஸ்வரூபம் 2 படம் குறித்த சென்சார் தகவல் ஒன்றி வெளியாகியுள்ளது. இதில், மீயூட், காட்சிகள் நீக்கம் என்று சுமார் 22 இடங்களில் சென்சார் குழு கத்திரி போட்டதால், 'விஸ்வரூபம் 2' கந்தலாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே கமல் கடுப்பாகி, அப்படத்தின் வெளியீட்டில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.