.

குழந்தையை பள்ளியில் விட வந்த தந்தை வெட்டி கொலை - சென்னையில் பரபரப்பு

July 12, 2018, Chennai

Ads after article title

சென்னையில் தனது குழந்தையை பள்ளியில் விட வந்த தந்தை ஒருவர் பள்ளி அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை, அடையாறு, இந்திராநகர் பகுதியில் உள்ள பள்ளிக்கு, தனது பிள்ளையை அழைத்து வந்த சுரேஷ் என்பவர் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, திரும்பிய போது, அவரை பள்ளி அருகே ஒரு கும்பல் வழிமறித்தது.

ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த அந்த கும்பல், சுரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து சரிந்த சுரேஷ் அதே இடத்தில் பலியானார்.

காலை நேரத்தில் பரபரப்பாக இயங்கும் ஒரு பள்ளி அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.