.

கிராமத்திலும் பரவும் கிகி நடனம்!

August 04, 2018, Chennai

Ads after article title

சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ள கிகி நடனதை பிரபல நடிகர்கள் பலர் ஆடி, அதன் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.

 

தற்போது இந்த கிகி நடனம் கிராமங்களில் கூட பிரபலமாகியுள்ள நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் காருக்கு பதில் உழவு மாடுகளை பயன்படுத்தி கிகி நடனம் ஆடுகிறார்கள்.


 

வயலில் உழவு மாடுகளை கட்டி உழ ஆரம்பிக்கிறார்கள். திடீரென்று இருவரும் மாட்டின் கயிறை விட்டுவிட்டு நடனம் ஆடுகிறார்கள். மாடுகள் தனியாக நடந்து செல்ல இவர்கள் இருவரும் துள்ளி குதித்து நடனமாடும் வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.