.

காவலர் உடற்தகுதி தேர்வு - மயக்கம் அடைந்த 6 பேரில் ஒருவர் மரணம்

July 12, 2018, Chennai

Ads after article title

ஜார்க்கண்டில் நடைபெற்ற காவலர் உடற்தகுதி தேர்வில், 10 கி.மீ தூரம் ஓடும் தேர்வில் 6 பேர் மயங்கி விழா, அதில் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்கண்டில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைக்கு ஜூலை 2 ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி  வரை ஆட்கள் தேர்வு செய்யும் பனி நடந்து வருகிறது.   

இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் ஒரு மணி நேரத்திற்குள் 10 கி.மீ தொலைவு ஓடும்படி தேர்வுக்கு வந்திருந்தவர்களிடம் கூறப்பட்டு உள்ளது.  இதில் ஓடியவர்களில் ராஜேஷ் குமார் ஷா என்பவர் உள்ளிட்ட 6 பேர் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உடனே மயங்கியவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ராஜேஷ் ஷா உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், நீர் சத்து இல்லாதது அவருக்கு உடல் நல குறைவை ஏற்படுத்தி இருக்க கூடும்.  எனினும், உடற்கூறாய்வுக்கு பின்பே சரியான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.