.

காதல் விவகாரம் - நண்பனை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த கல்லூரி மாணவர்

August 10, 2018, Chennai

Ads after article title

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ரோனக் சவுத்ரி(23). அவர் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். பெங்களூரில் தேர்வு எழுத 30 பேருடன் பெங்களூருக்கு வந்துள்ளார்.


அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விவி புரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 4வது மாடியில் தங்கியுள்ளார். புதன்கிழமை இரவு ரோனக் தனது நண்பர்கள் ராயல் சவுத்ரி, அபூர்வா சவுத்ரி ஆகியோருடன் பால்கனிக்கு சென்றுள்ளார். அப்போது காதல் விவகாரம் தொடர்பாக ரோனக் மற்றும் ராயல் சவுத்ரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு பெண் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபம் அடைந்த ராயல் சவுத்ரி தனது நண்பன் ரோனக்கை பால்கனியில் இருந்து பிடித்து கீழே தள்ளிவிட்டார். கீழே விழுந்த ரோனக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ராயல் சவுத்ரியை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.